காங்கிரஸ் எம்எல்ஏ வர்ஷா ஏக்நாத் கைக்வாடு பேட்டி - மும்பை

  ந்திய வருமானத்தில் முக்கிய வருமானமும் முதன்மை வருமானமும் ஈட்டித்தரும்  மகாராஷ்டிரா மாநிலம் தலைநகரான மும்பை தாராவி தாலுகாவில் இருந்து  தொடர்ந்துதனது 24 வயது முதல்  நான்காவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்   மேலும் இரண்டாவது முறையாக அமைச்சராக மாண்புமிகு அமைச்சர் வர்ஷா கைக்வாடு அவர்கள் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஆசியாவிலேயே மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவி பகுதியில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமாக வாழும் தமிழர் பகுதியில் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டவர் அமைச்சர் வாழ்த்து தெரிவிப்பதற்காக தமிழர் நலம் பேரியக்க மகாராஷ்டிரா மாநில தலைவரும் தொழிலதிபருமான கிருஷ்ணா காமாட்சி மற்றும் திருமதி கிருஷ்ணா காமாட்சி அவர்களோடு கன்னிவாடி கந்தசாமி தம்பி செல்வா அதிரடி அசோக் பழனிசாமி மற்றும் தொண்டர்களோடு ஆசிரியர் நாமும்  இரவு 10 மணி சயான் கோலிவாடா விலுள்ள அவர்களது இல்லத்திற்கு சென்ற அமைச்சர் அவர்களை வெளியில் சென்றுவிட்டார் சற்று நேரத்தில் வந்து விடுவார் என்றும் தகவலையடுத்து காத்திருந்தோம் சுமார் 11 மணி அளவில் வீடு திரும்பிய அவரை சந்தித்தபோது மிக மிக எளிமையாகவும் இன்முகத்தோடு தமிழர் நலம் பேரியக்க தலைவர் திரு கிருஷ்ணா காமாட்சி அவர்களை கைகூப்பி மகிழ்ச்சியோடு வரவேற்றார் கிருஷ்ணா காமாட்சி அவர்கள் ஆளுயர மாலை அணிவித்து வாழ்த்துக் கூறினார் தொடர்ந்து சமூக உரிமை மும்பை செய்தியாளர் திரு போஸ் அவர்கள் வாழ்த்துக் கூறி தமிழர்களைப் பற்றியும் தென்னிந்தியர்களை பற்றியும் தங்களது மேலான கருத்துக்களை கூறுமாறு வினவினார் ஆச்சரியத்தின் உச்சத்திற்கே சென்று விட்டோம் நேரமோ இரவு பதினோரு மணி எந்த ஒரு சலிப்பையும் காட்டிக்கொள்ளாமல் ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவி ஒரு குட்டி இந்தியா என்றும் இப்பகுதியில் இந்தியாவின் அனைத்து மாநிலம் குறிப்பாக தென்னிந்தியர்கள் அதிகம் அதிகம் வசிக்கும் இடமான தாராவி பகுதியை நான்காவது முறையாக மிக அதிகம் வாக்காளர்கள் தமிழர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான் எல்லையில்லா மகிழ்ச்சி அடைகிறேன் மேலும் என் தொகுதி மற்றும் மும்பை வாழ் தமிழர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்  கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட நான் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் சிறப்பாக பணியாற்றுவேன் என்று காலம் நேரம் பார்க்காமல் கனிவோடும் அன்போடும் கூறினார் இந்தியாவிலேயே இப்படி ஒரு அமைச்சரை இந்த காலகட்டத்தில் காண்பது அரிது என்று அருகில் உள்ளவர்களும் கூறினர் நம்மைத் தொடர்ந்து அமைச்சர் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு வருகை தந்த பொது மக்களோடு கேக் வெட்டி எளிமையாக கொண்டாடினார்.