சர்க்கரைக்கான ரேஷன் அட்டையை ஆன்லைன் மூலம் அரிசி வாங்குவதற்கான ரேஷன் அட்டையாக மாற்றிக் கொள்ளலாம்: தமிழக அரசு

சர்க்கரைக்கான ரேஷன் அட்டையை ஆன்லைன் மூலம் அரிசி வாங்குவதற்கான ரேஷன் அட்டையாக மாற்றிக் கொள்ளலாம்: தமிழக அரசு



 


 FOLLOW Samugaurimai.page
19 Nov. 2019 15:49


சென்னை: சர்க்கரை மட்டும் வாங்கக்கூடிய ரேஷன் அட்டையை அரசி வாங்குவதற்கான ரேஷன் அட்டையாக  மாற்ற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சர்க்கரை குடும்ப அட்டைகளாக வைத்திருக்க கூடியவர்கள் ரேஷன் அட்டைகளாக மாற்றுவதற்கான அறிவிப்பை உணவுத்துறை அமைச்சர் காமராஜர் செய்தி அறிக்கையின் மூலமாக வெளியிட்டுள்ளார். பொது விநியோக திட்டத்தின் கீழ் சுமார் 10 லட்சத்து 19 ஆயிரத்து 401 குடும்ப அட்டைகள் சர்க்கரை குடும்ப அட்டைகளாக உள்ளது. இந்த குடும்ப அட்டைகளை வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் தங்களுடைய சர்க்கரை அட்டைகளை அரசி பெறக்கூடிய குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இதன் அடிப்படையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் கீழ் சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள், தங்கள் குடும்ப அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்ய விரும்பினால், அதற்கான விண்ணப்பங்களை தங்களுடைய குடும்ப அட்டையின் நகலினை இணைத்து இன்று முதல் 26.11.2019 வரை www.tnpds.gov.in என்ற இணைய முகவரியிலும், சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் உதவி ஆணையர்களிடமும் சமர்ப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பெறப்படக்கூடிய விண்ணப்பங்கள் உடனடியாக பரிசீலனை செய்யப்பட்டு சர்க்கரை குடும்ப அட்டைகள் அதன் அடிப்படையில் மாற்றம் செய்யப்பட்டு அரசி குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முக்கியமாக தமிழகத்தை பொறுத்தவரை 3 வகையான பொது விநியோக திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைகள் 5 வகையில் வழங்கப்படுகிறது. ஒன்று பச்சை அட்டை, இவை அரசி தேர்வு செய்யப்படாத அட்டைகளாகும். இரண்டாவது வெள்ளை அட்டை, இவை அரசி தவிர மற்ற அனைத்து பொருட்களும் வழங்கப்படும், இவையே சர்க்கரை அட்டை என கூறப்படுகிறது. மூன்றாவது காக்கி அட்டைகள், இவை அனைத்து பொருட்களும் வழங்கப்படும். நான்காவது நீல அட்டைகள் இவை வனத்துறை அதிகாரிகளுக்குரியது. ஐந்தாவது பொருட்கள் இல்லாத அட்டை வழங்கப்படும். இந்த நிலையில் தான் சர்க்கரை அட்டை வைத்திருக்கக்கூடியவர்கள் அரிசி அட்டையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் உணவுத்துறை அமைச்சர் இந்த அறிக்கையை முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க பிறப்பித்துள்ளார். அதற்காக இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.