சிவசேனா கட்சியின் கிளை செயலாளர் பி.எஸ்.கே முத்துராமலிங்கம். திருநெல்வேலி மாவட்டம் வெங்கடாசலபுரம் ஊரைச் சேர்ந்த பி.எஸ்.கந்தசாமி தேவர், சங்கரம்மாள் தம்பதியின் மகன் பி.எஸ்.கே.முத்துராமலிங்கம். 1969 ல் பிறந்த இவர் மும்பையில் வளர்ந்து தனது 16 வது வயதில் சிவசேனா கட்சியின் அடிமட்டத் தொண்டனாக சேர்ந்தார். இவரது அரசியல் களப்பணியை அங்கீகரிக்கும் வகையில் சிவசேனா கட்சி கிளை செயலாளர் பதிவி வழங்கியது. அதிலிருந்து தாராவி தாலுக்கா வரை தலைவராக உயர்ந்தார். இவர் தாராவி மக்களுக்கு சாதி, மத, வேற்றுமை பாராமல் அனைத்து உதவிகளையும் உடக்குடன் செய்து வந்தார். பொதுச்சேவையிலும் ஈடுபட்டு ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்பவராகவும் விளங்கினார். பி.எஸ்.கே.முத்துராமலிங்கம் இவரின் பொதுச்சேவை நீண்டநாள் உழைப்பு இவற்றை அங்கீகரிக்கும் வகையில் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்ட இவரது மனைவி மாரியம்மாளை அமோக வெற்றிப்பெறச் செய்தனர் தாராவி மக்கள். 187 வது வார்டில் மக்களின் எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும் உடனே தீர்த்து வைக்கிறார் மாரியம்மாள் முத்துராமலிங்கம். மருத்துவ முகாம், ஏழை மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி என பல்வேறு நற்செயல்களை செய்துவருகிறார். கடந்த இரண்டு ஆண்களில் தாராவி மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி உள்ளார் மாரியம்மாள்.
சுமார் இருபது ஆண்டுகளாக மாகிம் இரெயில் நிலையம் அருகேவும், நீண்ட காலமாக இதே பிரச்சனை இருந்த கல்யாணவாடி பகுதியிலும் நிலவி வந்த மழைநீர் தேங்கும் பிரச்சனையை தீர்த்து வைத்துள்ளார். ரூ 2 கோடி செலவில் புதிய சாலை பூங்கா சாகுநகர் பகுதியில் அமைக்கப்பட்டது. இதுபோலவே தாராவி மெயின் ரோட்டில் உள்ள சாலை தடுப்பு சுவரில் பூங்கா அமைத்துள்ளார். கணவரின் ஆசியோடும், குடும்பத்தின் உறுதுணையோடும் பல நல்ல செயல்களையும் , நலத்திட்டங்களையும் , செய்து வருகிறேன். தொடர்ந்து மக்களுக்காக உழைப்பேன் என கூறுகிறார். நாமும் இவரை மனதார பாராட்டுவோம்.