தமிழனாய் பிறந்தோம் ! இந்தியனாய் வாழ்வோம் !
தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிராக செய்யப்படும் சதி:ராமதாஸ்
சென்னை: வேளாண் உற்பத்தியை அதிக ரிக்க மண்வகையீட்டுப் பிரிவை தொட ங்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கி றார்கள். இது சம்பந்தமாக பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்து வலியுறுத்தி கூறு வது. “உழவர்களின் வருமானத்தை 2022- ஆம் ஆண்டுக்குள் இருமடங்காக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடியும், வேளாண் உற்பத்தித் திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப் படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழ னிச்சாமியும் கூறி வருகின்றனர். ஆனால், அதற்கு பெரும் உதவியாக இருக்கும் திட் டத்திற்கு பல ஆண்டுகளாக முட்டுக்களில் ட்டை போடப்பட்டு வருவது அதிர்ச்சிய ளிக்கிறது. நிலம் வளமாக இருந்தால் தான் பயிர் செழிப்பாக வளரும். இந்தத் தத்துவ த்தின்படி, தமிழ்நாட்டில் வேளாண் உற்ப த்தியைப் பெருக்க, அனைத்து வருவாய் கிராமங்களிலும் விரிவான மண் வகையீடு செய்து, வேளாண்மைக்கு ஏற்ற நிலம் மற் றும் வேளாண்மைக்கு பயன்படாத நிலம்என பிரிக்கப்பட வேண்டும். வேளாண் மைக்கு பயன்படும் நிலங்களின் மண் வளத்தினை பாதுகாக்க அதன் பேரூட்ட மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களின் அள வை அறிந்து அதற்கேற்றவாறு உரமிட உழவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட வேண்டும். இந்த அறிவுரைகளை செயலி கள் மூலம் உழவர்களின் செல்பேசி வாயி லாகவே வழங்க முடியும். இதற்கு அதிக செலவும் பிடிக்காது. இதை பாட்டாளி மக் கள் கட்சி பல ஆண்டுகளாக வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையில் வலியுறு த்தி வருகிறது. பாராட்டுகள் குவிகிறது: இந்த யோசனைக்கு பாராட்டுகள் குவிந்த அளவுக்கு, செயலாக்கங்கள் நடைபெறவி ல்லை என்பது தான் மிகவும் வருத்தமளிக் கிறது. இதற்காக முதன்முதலில் செய்யப் பட வேண்டிய பணி, முதலில் வேளாண் துறையின் ஆராய்ச்சிப்பிரிவிலும், பின்னர் விரிவாக்கப் பிரிவிலும் இயங்கி வரும் மண்வகையீடு மற்றும் நிலப்பயன்பாட்டு நிறுவனத்தை கோவையில் உள்ள தமிழ் நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் ஓர் துறையாக இணைப்பது தான். 1964 - ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தி ற்கு அடுத்த சில ஆண்டுகளில் பாளைய ங்கோட்டை தஞ்சாவூர், வேலூர் ஆகிய இடங்களில் தனிப் பிரிவுகள் தொடங்கப் பட்டன.
தமிழ்நாட்டில் 38 ஒன்றியங்கள்: இதுவரை தமிழ்நாட்டில் 38 ஒன்றியங்க முட்டுக்களில் மண் வகையீடு செய்துள்ள இந்த நிறுவனம், சேலம் மாவட்டம், வாழப்பாடி, வீரபாண்டி மற்றும் நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் ஆகிய மூன்று வட்டாரங்களில் மட்டுமே ஒவ்வொரு கிராமத்திலும் புல எண்கள் வாரியாக பயிரிட வேண்டிய பயிர்கள், அவற்றுக்கு இட வேண்டிய உர த்தின் அளவுகள் ஆகியவற்றை உழவர்க ளுக்கு தெரிவித்து வருகிறது. இந்த சேவை யை நவீனமயமாக்கி,தமிழ்நாட்டின் அனை த்து பட்டிதொட்டிகளுக்கும் கொண்டு செல்வதே இன்றைய அவசியத் தேவை யாகும். இதற்காக மண்வகையீட்டு நிறு வனத்தை தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்துடன் இணைக்க வேண்டும் என்ற ஆலோசனை பல ஆண்டுகளாக வலியுறுத் தப்பட்டு வருகிறது. 2004-ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியின் போது முன்னாள் நிதித்துறை செயலாளர் ஏ.எம்.சுவாமிநா தன் தலைமையில் அமைக்கப்பட்ட பணி யாளர்கள் மற்றும் செலவினங்கள் சீர்திரு த்த ஆணையமும் இதே பரிந்துரையை வழங்கியிருந்தது. அதை செயல்படுத்து வதற்குள் அதிமுக ஆட்சிக்காலம் முடிவ டைந்துவிட்ட நிலையில், அடுத்து வந்த திமுக ஆட்சியில் இந்த பரிந்துரையை செயல்படுத்த வேண்டும் என்று அப்போ தைய முதலமைச்சர் கலைஞருக்கு 04.09.2007, 09.01.2008 ஆகிய தேதிகளில் கடி தம் எழுதினேன்.